Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாவலபிட்டியில் மண் சரிவு;

நாவலபிட்டியில் மண் சரிவு;

நாவலப்பிட்டி பழைய தொடருந்து முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் யுவதி ஒருவரும் அவரது, மாமியார் மற்றும் மூன்று மாதக் குழந்தை என நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெய்து வரும் கன மழையினால் வீட்டின் மீது மண்மேடு சரிந்ததாகவும், பிரதேசவாசிகளும் நாவலப்பிட்டி காவல்துறை அதிகாரிகளும் விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தும் அது பலனளிக்கவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலங்கள் தற்போது நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பிரதேசத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments