தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கை கரையோரமாக நேற்றைய (26) தினம் காணப்பட்ட தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 08 km/h வேகத்தில் நகர்ந்து, இன்று (27) காலை ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவடைந்து அதே பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
இது தற்போது அம்பாந்தோட்டையில் இருந்து கிழக்கு-வடகிழக்காக 150km தூரத்திலும்,
மட்டக்களப்பில் இருந்து கிழக்கு-தென்கிழக்காக 190km தூரத்திலும் காணப்படுகின்றது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கையின் கரையோரத்தை ஊடறுத்து நகர்ந்து
அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
*இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Yemen நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Ditwah எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.*
அதன் பின்னர் இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கை கரையோரமாக நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேசத்தை அதனை அடுத்து வரும் 48c மணித்தியாலத்தில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது


