Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திருகோணமலையில் பதற்றம்; போலீசாரை தாக்கிய பிக்கு

திருகோணமலையில் பதற்றம்; போலீசாரை தாக்கிய பிக்கு

திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வெளியிட்டுள்ள ஒரு குரல் பதிவில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு குறித்த சிலை அகற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த குரல் பதிவில், “8 மணியளவிலே அடாவடியாக சிலை கொண்டு வந்து வைக்கப்பட்ட போது அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்து பேசப்பட்டது.

இதன்போது 3 மணித்தியாலங்களுக்குள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது புத்தர் சிலையை பெரும் பதற்றத்துக்கு மத்தியில் அகற்றிய பொலிஸாரின் கன்னத்தில் பிக்கு ஒருவர் தாக்கியுள்ளார்.

இதற்கிடையில், நேற்றிரவு திருகோணமலையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதேவேளை, இந்த அசாதாரண நிலைமை தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவின் துரித நடவடிக்கையினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments