Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்போதை மாத்திரைகளுடன் மூவர் கைது யாழில் சம்பவம்!

போதை மாத்திரைகளுடன் மூவர் கைது யாழில் சம்பவம்!

இன்றையதினம், கொக்குவில் – கலட்டி பகுதியில் வைத்து 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20,21 மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments