நமது நிருபர்
நுவரெலியா நகர் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (12) பகல் தீபிடிந்து எரிந்தமையால் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
மேலும் பலசரக்கு கடையில் வெல்டிங் செய்துக்கொண்டிருந்த வேலையில் அருகில் இருந்த பட்டாசு பெட்டியில் தீ பற்றியதால் திடீர் என்று கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் தீயை அணைப்பதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்தபோதும் வியாபார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகியது.
மேலும் அரிசி மற்றும் வெங்காயம்,வெள்ளைபூடு,போன்ற பல உணவு பொருட்களும் தீயில் எரிந்துள்ளதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரிவிக்கப்படுகின்றது.


