Wednesday, March 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு;

பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு;

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகமொன்றில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இன்றையதினம் (11) தற்கொலை குண்டுதாரியால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொல்லப்பட்டவர்களிலும் காயமடைந்தவர்களிலும் பெரும்பாலானோர் சட்டத்தரணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் குண்டுவெடிப்பு நடந்த மறுதினமான இன்று இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் 12.30 மணியளவில் நடந்த இந்த குண்டுவெடிப்பின் சத்தம் ஆறு கிலோமீட்டர் வரை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments