Saturday, March 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கிணற்றில் தவறி விழுந்த குழந்தை மரணம்!

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை மரணம்!

துன்னாலை வடக்கு,  கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த அருண்நேரு அஸ்வந் என்ற நான்கு வயது சிறுவனாவார்.

நேற்று திங்கட்கிழமை (10) காலை சிறுவன் வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடிய போது கிணற்றுக்குள் சிறுவன் காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இம் மரணம் தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன்தயான் விசாரணை மேற்கொண்டார் நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments