அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜனாதிபதி:
அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பிராட்பேண்ட் வவுச்சர் வழங்கப்படும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வலைத்தளங்களுக்கு மட்டுமே அணுகல் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
2026 ஆம் ஆண்டில், நலன்புரித் திட்டம் அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்வதற்காக அஸ்வெசும பயனாளிகள், மதிப்பாய்வு செய்யப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அடுத்த ஆண்டிற்கான பாதீட்டினை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றார் இதில்
அரச ஊழியர்கள் தொடர்பில் :
இலங்கையில் அரச ஊழியர்கள் சேவை என்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வருகின்றார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே 3 கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச துறையில் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.


