Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார்.

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பொருளாதாரம் ஸ்தீரத்தன்மையில் இருக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேசிய வருமானம், அரச நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

உலக நாடுகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்ற போதிலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த வருட இறுதிக்குள் அந்திய செலவாணி 7 வீதமாக அதிகரிக்கும் .

2030 ஆம் ஆண்டுக்குள் பொதுக் கடனை 87% ஆகக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

வருமானம் குறைந்த மக்களுக்கு அஸ்வெசும திட்டத்தை முன்னெடுப்பதுடன், 2026 ஆம் ஆண்டு மீண்டும் அஸ்வெசும பெறுவோரை மீளாய்வு செய்யவுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து, நாட்டுக்கு தேவையான பிரதி பலன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

அரச நிறுவனங்கள் மற்றும் அரச சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு ஈ சேவை அறிமுகப்படுத்தப்படும்.

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2026 மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்படும்

கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிப்பதன் மூலம் பொருளதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.

2025 ஆம் ஆண்டு 823 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

2026 ஆம் ஆண்டு அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம்.

குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது என்னை ஹிட்லர் என்று விமர்ச்சிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments