நேற்று (2)மதியம், மஸ்கெலியா பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது மஸ்கெலியா பகுதியில் ஒரு சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது, உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒரு சந்தேக நபரை சுரங்க உபகரணங்களுடன் கைது செய்தனர் பொலிஸார்.
சந்தேக நபர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


