Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கடல் அட்டைகள் பறிமுதல்:- மண்டபம் அருகே சம்பவம்

கடல் அட்டைகள் பறிமுதல்:- மண்டபம் அருகே சம்பவம்

மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் இன்று (02) காலை நாட்டு படகுடன் பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இந்திய கடலோர காவல் படை மற்றும் மண்டபம் சுங்கத் துறையினர் இணைந்து தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்று(2) காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மண்டபம் தோணித்துறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு சோதனை செய்தபோது அதில் 80க்கும் மேற்பட்ட மூட்டைகள் காணப்பட்டது.

அதனை சோதனை செய்த போது சுமார் 1360 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கடல் அட்டைகளுடன் படகு பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் படகில் இருந்து கடலில் குதித்து தப்பித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் இந்திய மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

சுங்கத்துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து பறிமுதல் செய்த கடல் அட்டைகள் அடங்கிய சாக்கு மூட்டைகள் மற்றும் நாட்டு படகை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மன்னார் நிருபர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments