Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மதுபோதையில் தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்

மதுபோதையில் தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் ஆட்டோர் ஓட்டுநர் தினகரன். இவரும், இவரது தம்பி சரணும் ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தினகரன், காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது தம்பி சரணை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரணை
உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்நிலையில், தம்பியை கொலை செய்த தினகரன்
போலீசில் சரணடைந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments