Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்3 கோடிக்கு மேற்பட்ட கஞ்சா மீட்பு; பருத்தித்துறை போலீசார் அதிரடி

3 கோடிக்கு மேற்பட்ட கஞ்சா மீட்பு; பருத்தித்துறை போலீசார் அதிரடி

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை போலீசாரால் இன்று (01)மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47,பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. விற்கின்ற, அடிமையான அனைவருக்குமான அறிவித்தல். அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் போலீசாரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின்கீழ் தற்போது போதை அற்ற நாடு வேலைத்திட்டம் இடம் பெற்றுவருகின்றது.

இந்நிலையில் பருத்தித்துறை போலீஸாரின் தீவிர கண்காணிப்பிலிருந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கேரள கஞ்சாவை பருத்தித்துறை போலீஸ் பிரிவிலுள்ள கடற்பரப்பில் இறக்க முற்பட்டபோது பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான போலீஸார் சுற்றிவளைத்து 47 பொதி கஞ்சாவை கைப்பற்றியதுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களும், மற்றும் கஞ்சா படகு உட்பட்ட பொருட்களும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க. ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும், இன்று கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் மூன்று கோடிக்கு அதிகம் என்றும் தெரிவித்தார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments