Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்புனரமைக்கப்படாத வீதி

புனரமைக்கப்படாத வீதி

பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை பிரதேச சபைக்கு உட்பட்ட பசறை பிரதேச சபைக்கும் பசறை தபால் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதி வீதியில் சுமார் 50 மீற்றர் அளவிலான பகுதி இரண்டு வருடங்களுக்கு முன் பெய்த கடும் மழையினால் குறித்த வீதி தாழிறங்கியது.

இருப்பினும் அவ்விடத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரினால் எச்சரிக்கை நாடா கட்டப்பட்டு அன்று முதல் இன்று வரை ஒற்றை வழி போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது .

எனவே சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக குறித்த வீதி புனரமைக்க படாத காரணத்தினால் சாரதிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாவது மாத்திரமின்றி அதிகளவிலான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி குறித்த வீதியை புனரமைத்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சாரதிகளும்  வியாபார நிலைய உரிமையாளர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments