கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பேரூந்து நிறுத்தப்பட்டிருந்த பேரூந்தின் பின்புறத்தில் மோதியதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பின்னால் வந்த பேரூந்து அதிவேகமாக பயணித்ததால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதோடு, விபத்து தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


