ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்துடன் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாபிரிக்கா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
320 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது


