கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு போதைப்பொருளுடன் இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய குறித்த நபர், மலேசியாவிலிருந்து நேற்று மாலை இலங்கைக்கு வந்துள்ளார்.
இவர் தாம் எடுத்து வந்த போதைப் பொருளை, பம்பலபிட்டியில் உள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து, உள்ளூர் வியாபாரி ஒருவரிடம் அவர் ஒப்படைக்கவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 84.96 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுடன் கைதான இந்தியர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


