Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்போதைப்பொருளுடன் கைதான பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

போதைப்பொருளுடன் கைதான பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பு – புதுக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட, பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (20) உத்தரவிட்டுள்ளார்.

மருதானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது நபரொருவரின் கையடக்கத் தொலைபேசியை பலாத்காரமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் புதுக்கடை பிரதேசத்தில் 11 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வாழைத்தோட்டம் பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments