Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தொலைபேசியுடான உடனடி கடன் சேவை - பொலிஸார் எச்சரிக்கை!

தொலைபேசியுடான உடனடி கடன் சேவை – பொலிஸார் எச்சரிக்கை!

இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய நிறுவனங்கள் ஊடாக கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில நிறுவனங்கள் கடனை மீளப்பெறும் கட்டத்தில் அதிர்ச்சிகரமாக அதிகளவிலான வட்டிகள் வசூலிக்கப்படுவதாகவும், தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான தகவல்களை பரப்பும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றனர்.

இதனை தொடர்ந்து, இவ்வாறான முறையில் இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கியின் வங்கியற்ற நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தை தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொண்ட போது , இவ்வாறான பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் முறைமை கடைபிடிக்காமல் செயற்படுவதாகவும், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குபடுத்தல் முறைமையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலும் அறிவித்துள்ளனர்.

அதனால், இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக உடனடியாக கடன் பெறும் போது அது தொடர்பாக அவதானத்துடனும், விளக்கங்கள் அதன் நிபந்தனைகளை முறையாக அறிந்து அதன் பின்னர் சேவையை பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments