Monday, March 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், மத்திய மந்திரியுமான குமாரசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்தார். டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது ஆந்திராவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான நிதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments