Wednesday, March 18, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

‘தளபதி 69’ படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “தி கோட்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ‘அனிமல் மற்றும் கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘தளபதி 69’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, வருகின்ற புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 1ந் தேதி தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் தலைப்பும் வெளிவர வாய்ப்பு உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments