Thursday, March 19, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்திமுகவை 2026 -ல் வீட்டுக்கு அனுப்புவதே புண்ணியம் - தமிழிசை சவுந்தரராஜன்

திமுகவை 2026 -ல் வீட்டுக்கு அனுப்புவதே புண்ணியம் – தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விஞ்ஞானபூர்வமாக ஊழல் பட்டம் பெற்றவர்கள் திமுகவினர். சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக, கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சிதான். திமுக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து பாவங்களை சேர்த்துக் கொண்டது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், அவர்களது குடும்பத்தினரின் பாவத்தையும் திமுக சேர்த்துள்ளது. வேங்கைவயலில் மனித கழிவு கலந்த தண்ணீரை ஊர் மக்கள் குடித்து பெரும் இன்னலுக்கு ஆளான நிலையில், இன்றளவும் யார் அதை செய்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் ஊர் மக்களின் பாவத்தை வாங்கிக்கொண்டதும் திமுகதான்.

இப்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அம்பேத்கர் பற்றி திமுக பேசுவது நியாயமா ?. ‘சென்னையில் ரூ.4,000 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைத்து விட்டோம்’ என்று கூறிக்கொள்ளும் திமுக, மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் பாவங்களையும் வாங்கிக் கொண்டது. ஊழல் செய்வதையே குடும்ப தொழிலாக்கி, ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த, நிர்வாக திறனற்ற திமுகவை 2026 -ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments