Thursday, March 12, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கரூர் சம்பவம் தொடர்பில் பிரேமலதா விளக்கம்!

கரூர் சம்பவம் தொடர்பில் பிரேமலதா விளக்கம்!

கரூர் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கிறது என்று தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் ,

தமிழ்நாடு முழுக்க அரசியல் பொதுக்கூட்டங்கள், மாநாடு நடைபெறுகின்றன. ஆனால் இதுவரைக்கும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இப்படி ஒரு உயிர்ச்சேதம் எங்கும் நடைபெறவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களையும் நேரில் சந்தித்தேன்.

அனைவரும் கூறுவது அங்கு குறுகலான பாதை, உரிய பாதுகாப்பு யாருக்கும் தரப்படவில்லை. விஜய் வாகனம் கூட்டத்தை நெருங்கி வரவர கூட்ட நெரிசல் அதிகமாகி உள்ளது. அந்த இடத்தில் பொலீஸ் இலேசான தடியடி நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிறையபேர் கீழே விழுந்ததால் உயிர்பலி ஏற்பட்டிருக்கிறது. அம்பியூலன்ஸ்கள் வரிசையாக வருகின்றன. விஜயே சொல்கிறார், ‘என்ன, நம் கட்சி கொடியோட அம்பியூலன்ஸ் வருகிறதே’ என்று. அந்த அம்பியூலன்ஸ்கள் யாருடையது? இதுக்கெல்லாம் அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

இதற்கு யார் பொறுப்பேற்பது?. குறுகலான பாதையில் அரசு அனுமதி தரலாமா. பெரிய மைதானத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். சிகிச்சை பெறுபவர்களிடம் கேட்டதற்கு, காலதாமதம், குறுகலான பாதை, கரூர் மின்சாரத்தடை, பொலிஸ் தடியடி, த.வெ.க கொடியுடன் அம்பியூலன்ஸ் ஆகிய காரணங்களால்தான் உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது. த.வெ.க.வும் இதை உணர வேண்டும்.

விஜய்க்கு எந்தவாறு பாதுகாப்பு இருக்கிறதோ அதேபோல் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பொலிஸ் ஆளுங்கட்சிக்கு மட்டுதான் நிற்பார்கள். எதிர்க்கட்சிக்கு ஆதரவு தரமாட்டார்கள்.

எல்லாம் நடந்த பிறகுதான் பொலிஸ் வருகிறார்கள். அதுவரை பொலிஸார் என்ன செய்தார்கள். அதன்பிறகு அமைச்சர்கள் எல்லாம் வருகிறார்கள். விஜய் பேசுகிற 10 நிமிடத்துக்கு முன்கூட்டியே பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்.

ஆனால் அப்படி எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இதுபோன்று தமிழகத்தில் நடக்கக்கூடாது. த.வெ.க பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments