Tuesday, March 10, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கடனில் இருக்கும் ரோபோ சங்கர் குடும்பம் உண்மையை உடைத்த நாஞ்சில் விஜயன்!

கடனில் இருக்கும் ரோபோ சங்கர் குடும்பம் உண்மையை உடைத்த நாஞ்சில் விஜயன்!

சினிமாவில், தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ரோபோ சங்கர். சமீபத்தில் அவர் உடல்நலக் குறைவால் திடீரென காலமானார்.

அவரது இழப்பு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பரும், கலைஞருமான நாஞ்சில் விஜயன் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்து, ரோபோ சங்கரின் இழப்பு குறித்துப் பேசியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில், ரோபோ சங்கரின் உடல் நலக்குறைவுக்குக் குடிப்பழக்கம் தான் முக்கிய காரணம் என்று பலர் கருத்துகளைப் பரப்பி வந்தனர்.

இதற்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், “அதுவும் ஒரு காரணமே தவிர, அது மட்டும் தான் காரணம் இல்லை.

அவர் மேடைக் கலைஞராக இருந்த போது உடம்பில் பூசிக்கொண்டிருந்த பெயிண்ட், ஓயாத உழைப்பு என எல்லாமே சேர்ந்துதான் அவருடைய உடல்நலக் குறைவுக்குக் காரணம்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்புக்கே சென்றார்.

ரோபோ சங்கர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபோதே ஐம்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. அவ்வளவு பணத்தைச் செலவு செய்துதான் பிரியங்கா அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவச் செலவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள். இந்திரஜா அணிந்திருந்த தாலி உட்பட அத்தனை நகைகளையும் மருத்துவமனையிலேயே கழட்டிக் கொடுத்தார். அதேபோல அவரது கணவர் கார்த்திக்கும் தனது கையில் அணிந்திருந்த செயின், மோதிரம் என அனைத்தையும் கழட்டிக் கொடுத்துதான் மருத்துவச் செலவு செய்யப்பட்டது. அனைத்தையும் அருகில் இருந்து கண்கூடாகப் பார்த்தவன் நான்” என்று நாஞ்சில் விஜயன் மனம் உருகி பேசியுள்ளார

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments