Tuesday, March 10, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பரபரப்பு புகார்!

நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பரபரப்பு புகார்!

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக பிரபலமான நாஞ்சில் விஜயன் மீது, திருநங்கை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்தப் புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக நாஞ்சில் விஜயனுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் ரீதியாக ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருமணம் ஆன பிறகும் அவருடன் பழகி வந்ததாகவும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பும் இருவரும் ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது தன்னை திருநங்கை என்ற காரணத்தைக் காட்டி, நாஞ்சில் விஜயன் திருமணம் செய்ய மறுப்பதாக புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments