மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (01) அனுமதி வழங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டு லங்கா பாஸ்பேட் லிமிடெட் (Lanka Phosphate Limited) நிறுவனம் , எப்பாவல பாஸ்பேட் (Eppawala phosphate) நிறுவனத்தை உலக சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் மூன்று நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
டி.எம் டிரேடர்ஸ் நிறுவனம் (D.M Traders), திசரு சர்வதேச இன்ஜினியரிங் நிறுவனம் (Disaru International Engineering Company) மற்றும் இச்சிபான் பிரைவட் லிமிடெட் (Ichiban Pvt Limited) ஆகிய
மூன்று நிறுவனங்களுக்கே எப்பாவல பாஸ்பேட் (Eppawala phosphate) நிறுவனம் விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு விற்பனை செய்வதற்கு எந்த சட்ட அதிகாரமும் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.


