ஜா-எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துடெல்ல மற்றும் குடஹபொல ஆகிய ரயில் நிலைங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ரயில் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் ரயில் வருவதை கண்டு உடனடியாக அங்கிருந்து செல்ல முயன்ற போது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஜா-எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


