Saturday, March 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சூதாட்டம் இலங்கையர்களுக்கு தடை : சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் - ஹர்ஷன...

சூதாட்டம் இலங்கையர்களுக்கு தடை : சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் – ஹர்ஷன ராஜகருணா

நாட்டின் கலாசாரத்துடன் பார்க்கும்போது சூதாட்டத்துக்கு கடுமையான விமர்சனம் இருந்து வருகிறது. அதனால் இந்த சூதாட்ட விளையாட்டை சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதித்து, இலங்கையர்களுக்கு தடை செய்யும் ஒரு தீீரமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனை ஒன்றை நாங்கள் முன்வைக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சூதாட்டச்சட்ட மூலம் கடந்த அரசாங்க காலத்தில் கொண்டுவரப்பட்ட போது, அன்று எதிர்க்கட்சியில் இருந்த அநுரகுமார திஸாநாயக்க, அந்த சட்டமூலத்தை கடுமையாக விமர்சித்ததுடன் நாட்டை சூதாட்ட சந்தையாக்கப்போவதா என கேள்வி எழுப்பி இருந்தார். அவ்வாறு விமர்சித்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று நாட்டின் ஜனாதிபதியாக கசினோ நிலையத்தை ஆரம்பித்துவைக்க சென்றிருந்தார். அதேநேரம் கசினோ வியாபாரத்தை பலப்படுத்தும் வகையில் தற்போது சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.இந்நிலையில் எங்களையும் இவர்கள் விமர்சிக்கின்றனர்.

எங்களைப்பொறுத்தவரை, நாங்கள் சூதாட்ட சட்டமூலத்துக்கு எதிர்ப்பு இல்லை. இதனை கண்காணித்து, இதற்கு அதிகாரசபை ஏற்படுத்த வேண்டும். அந்த அதிகாரசபை சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்றே தெரிவிக்கிறோம். இதுதொடர்பில் சுயாதீன அதிகாரசபை ஒன்று இல்லாமல், அமைச்சருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பாரியளவில் மோசடிகள் இடம்பெற வாய்ப்பு இருக்கின்றன.அதனால் இந்த அதிகாரசபையின் பதவிகள் அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டுவந்து, இதன் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.

சூதாட்ட விளையாட்டை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகளை மேலும் அதிகரித்துக்கொள்ளலாம். அதன் மூலம் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளலாம். அது உண்மை.அதேநேரம், எமது நாட்டின் கலாசாரத்துடன் பார்க்கும்போது. இதற்கு கடுமையான விமர்சனமும் இருக்கிறது.அதனால் இந்த சூதாட்ட விளையாட்டை சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதித்து, இலங்கையர்களுக்கு தடை செய்யும் ஒரு தீீரமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனை ஒன்றை நாங்கள் முன்வைக்கிறோம்.

இதனை உண்மையாகவே தெரிவிக்கிறோம். இப்படியான பல நாடுகள் இருக்கின்றன. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் இவ்வாறுதான் செயற்படுத்தப்படுகின்றன. அதனால் எமது நாட்டிலும் சூதாட்ட விளையாட்டுக்களை சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதித்து, எமது நாட்டவர்களுக்கு தடை செய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை.

அதேபோன்று கஞ்ஞா செடி வளர்ப்பதற்கு மீரிகம பிரதேசத்தில் முதலீட்டு சபைக்கு உரித்தான காணியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் உண்மை தன்மை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். முன்னாள் அமைச்சர் ஒருவர் கஞ்ஞாவுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு அன்று கடும் விமர்சனம் செய்த இவர்கள், தற்போது இதற்கு அனுமதிக்கின்றனர்.

இவ்வாறுதான் இவர்கள் கடந்த காலங்களில் எதிர்த்த பல விடயங்களை தற்போது அனுமதித்து வருகிறார்கள். அரிசி இறக்குமதி செய்வதில்லை என்றார்கள். தற்போது இறக்குமதி செய்கிறார்கள். அரிசி ஆலை உரிமையாளர்களை மண்டியிடச்செய்வதாக தெரிவித்தார்கள். ஆனால் தற்போது அரசாங்கே அரிசி ஆலை உரிமையாளர்களிடம் மண்டியிட்டுள்ளது.

எனவே அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தது. அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அதனால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கிறோம் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments