பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகில் உள்ள வயலில் இருந்து இன்று திங்கட்கிழமை (18) காலை நிர்வாணமான நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
வயலின் உரிமையாளர் நான்கு நாட்கள் கழித்து இன்றைய தினம் காலை மீண்டும் வயலுக்குச் சென்றிருந்த போது சடலத்தை கண்டுள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
65 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


