Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உடையார் கட்டுப்பகுதியில் கார் விபத்து ; ஒருவர் காயம்

உடையார் கட்டுப்பகுதியில் கார் விபத்து ; ஒருவர் காயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று உடையார் கட்டு பகுதியில் வீதியில் திருப்ப முற்பட்ட போது மற்றொரு காருடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments