Sunday, March 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!

இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!

இவ்வாண்டில் இந்திய மாணவர்களின் 80 சதவீத வீசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளதாக அந்நாட்டின் குடியுரிமைத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் இவ்வளவு அதிகளவில் மாணவர் வீசா நிராகரிப்பு இதுவே முதல் முறையாகும். குறிப்பாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு 18 சதவீத இந்திய மாணவர்கள் கனடா செல்ல விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் அது 9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வீசா வழங்கலில், மாணவர்களின் நிதி ஆதாரம், மொழித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விரிவான மேற்படிப்பு திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வீட்டுவசதிப் பற்றாக்குறை, அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களே இந்த நிலைக்கு காரணம் என அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

தற்போது இந்திய மாணவர்களில் 9 சதவீதம் மட்டுமே கனடாவைத் தெரிவு செய்கின்றனர். அதேசமயம், 31 சதவீத மாணவர்கள் ஜெர்மனியை முதன்மைத் தெரிவாகக் கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments