கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து 600,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேகநபர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


