Wednesday, June 24, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்கள்

538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்கள்

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அதிஅபாயப் பிரிவுகளில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, மேல் மாகாணமே டெங்கு நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவிலான அதிஅபாயக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாகாண வாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:-

1. கொழும்பு மாவட்டம்

கொழும்பு மாநகர சபை எல்லை, மகரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொட உயன மற்றும் கோட்டடுவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

2. கம்பஹா மாவட்டம்

அத்தனகல்ல, சீதுவ, களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான மற்றும் மஹர ஆகிய பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

3. களுத்துறை மாவட்டம்

பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வத்தேகம (வத்துவ), களுத்துறை மற்றும் பாயாகல ஆகிய பகுதிகள் இந்த அதிஅபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய மாவட்டங்கள்

மேல் மாகாணத்துக்கு மேலதிகமாகக் காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அதிஅபாயக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது வீடுகள், பொது இடங்கள் மற்றும் பணியிடங்களைச் சூழவுள்ள பகுதிகளில் கொசுக்கள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், சோதனைகளில் ஈடுபடும் சுகாதாரக் குழுவினருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments