இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது 20க்கு 20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.
நொட்டிங்காமில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் பெற்றது.
இதையடுத்து, 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது. 5 ஓவர்களுக்குள் 5 விக்கட்டுகளை இழந்தது.
11.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 76 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
5 போட்டிகள் கொண்ட 20 ஓவர்கள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்ற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
தொடரை சமன் செய்ய மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


