Tuesday, November 17, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரைக்கு வரும் மன்சூர் அலிகானின் திரைப்படம்!

34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரைக்கு வரும் மன்சூர் அலிகானின் திரைப்படம்!

மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்த ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ திரைப்படம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

1993ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை பாலு ஆனந்த் இயக்கியிருந்தார். மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்ததுடன், பாடல்களை எழுதி, இசையமைத்து, தனது தயாரிப்பு நிறுவனத்தின் ஊடாகத் தயாரித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா, நாகேஷ், நெப்போலியன், வடிவுக்கரசி, டிஸ்கோ சாந்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்திருந்தனர்.

அத்துடன், இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் தங்கர் பச்சன் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், மேம்படுத்தப்பட்ட ஒலி வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments