Saturday, October 17, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்2027 ஆசியக் கோப்பை போட்டிகள் குறித்து வெளியான அறிவிப்பு

2027 ஆசியக் கோப்பை போட்டிகள் குறித்து வெளியான அறிவிப்பு

சவூதி அரேபியாவில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் போதிலும், 2027 ஏஎஃப்சி (AFC) ஆசியக் கோப்பைக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அந்நாட்டின் உள்ளூர் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தத் தொடருக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெறுவதாகவும், ஆசிய கால்பந்து கூட்டமைப்போடு (AFC) இணைந்து பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.

ரியாத், ஜெத்தா மற்றும் அல் கோபார் ஆகிய நகரங்களில் அடுத்த வருடம் ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் இந்தத் தொடர், திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கவலை சமீபத்திய தாக்குதல்களால் எழுந்துள்ளது.

உள்நாட்டு கால்பந்து போட்டிகள் உட்பட பல விளையாட்டு நிகழ்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏஎஃப்சி (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா கூறுகையில், ”இது குறித்த இறுதி முடிவை நவம்பர் இறுதி வரை ஒத்திவைக்கலாம் என்று தெரிவித்தார்.

அத்துடன், தேவைப்பட்டால், இந்தத் தொடரை ஓராண்டு தள்ளி வைத்து 2028 ஆம் ஆண்டில் நடத்தலாம். ஆனால், தற்போதைய சூழலை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடியே நடைபெறுகின்றன” என்று அவர் கூறினார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments