Thursday, October 22, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்

2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்

2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் ஐச்சி நகோயா நகரில் நேற்று முன்தினம்(18) ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் 24ஆம் திகதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சீனா 26 தங்கம் உட்பட 62 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பாரா நீச்சல் போட்டிகளில் மட்டும் 14 தங்கப் பதக்கங்களை வென்று சீன வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை, போட்டியை நடத்தும் ஜப்பான், 8 தங்கம் உட்பட 27 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் ஜப்பான் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்றுள்ளனர்.

மேலும், உஸ்பெகிஸ்தான் 6 தங்கம் உட்பட 23 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments