நிதி தொடர்பான தகவல்களைத் திருடுவதையும், ஆப்பிள் சாதனங்களில் தீங்கிழைக்கும் மென்பொருட்களைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிபிசி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் எச்எஸ்பிசி வங்கி, எயார் பிரான்ஸ் மற்றும் ஐகியா உள்ளிட்ட உலகின் சுமார் 200 முக்கிய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தொழில்நுட்ப ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலின் மூலம் பயனர்களின் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதுடன், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களையும் தீங்கிழைக்கும் மென்பொருட்களால் பாதிக்கச் செய்வதே தாக்குதலாளர்களின் நோக்கமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆப்பிள் நிறுவனத்தின் பல சேவைகள் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, App Store, iCloud, Apple Pay, Apple Music, Apple Support உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புதிய iPhone சாதனங்களைச் செயற்படுத்தும் (Activation) செயல்முறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


