தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இதுவரை தனித்த இனமாக அடையாளம் காணப்படாத சிறிய காட்டுப் பூனை இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
‘Tilcayo’ என அழைக்கப்படும் இந்தப் பூனை, நூறு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் புதிதாக அடையாளம் காணப்பட்ட காட்டுப் பூனை இனமாகக் குறிப்பிடப்படுகின்றது.
சிறிய உடல், புள்ளிகள் கொண்ட தோற்றம் மற்றும் காட்டுப் பூனைகளின் தனித்துவமான பண்புகளைக் கொண்ட இந்த உயிரினம், இதற்கு முன்பு அறியப்பட்ட மற்றொரு தென் அமெரிக்க காட்டுப் பூனை இனத்துடன் குழப்பப்பட்டு வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய இனமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதன் வாழ்விடத்தையும் எண்ணிக்கையையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


