Sunday, September 20, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ – பிரமாண்ட புரமோஷன் பயணம் ஆரம்பம்

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ – பிரமாண்ட புரமோஷன் பயணம் ஆரம்பம்

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சுந்தர்.சி மற்றும் குஷ்பு சுந்தர்.சி உள்ளிட்டோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி, கெத்திகா சர்மா, சைத்ரா ஜெ. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், நாசர் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘மீசைய முறுக்கு’ திரைப்படம் தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பயோபிக் எனவும், ‘மீசைய முறுக்கு 2’ இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்களை மையமாகக் கொண்ட பரந்த கதைக்களத்தைக் கொண்டுள்ளதாகவும் ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.

மேலும், கானா கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 25ஆம் திகதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் படக்குழுவினர் ரசிகர்களை சந்திக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments