Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்வொஷிங்டனில் பதற்றம்: துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது!

வொஷிங்டனில் பதற்றம்: துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது!

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் அவசரமாக வெளியேற்றப்பட்டார்.
அதிபர் ஜனாதிபதி மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென அங்கு புகுந்த இரகசிய சேவை (Secret Service) அதிகாரிகள் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அந்தச் சமயத்தில் சுமார் 7 அல்லது 8 முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் விருந்தினர்கள் அச்சமடைந்து, மேசைகளுக்கு அடியில் தஞ்சமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க ரகசிய சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில் டொனால்ட் ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக உள்ளனர். தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு, முழு வளாகமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் பாதுகாப்புப் பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து தாம் வெள்ளை மாளிகையிலிருந்து மிக விரைவில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments