Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்புதிய பொலிவு பெறும் மருதானை புகையிரத நிலையம்!

புதிய பொலிவு பெறும் மருதானை புகையிரத நிலையம்!

இலங்கையின் மிக முக்கியமான மற்றும் அதிக பயணிகள் நடமாட்டம் கொண்ட நிலையங்களில் ஒன்றான மருதானை புகையிரத நிலையத்தை, பயணிகளுக்கு ஏற்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நடமாடும் வகையில் நடைமேடைகள் (Platforms) புனரமைக்கப்பட்டு, புதிய கூரைகள் பொருத்தப்பட்டுள்ளன.
புகையிரத வருகை மற்றும் புறப்பாடுகளைக் காண்பிக்கும் புதிய டிஜிட்டல் திரைகள் மற்றும் ஒலிபெருக்கி கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
பயணிகளுக்கான பொது மலசலகூட வசதிகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் உயர்தரமான முறையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
முழுமையான மின்சாரக் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு, இரவு நேர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நவீன மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
முதலாம் கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத்தின் கீழ் புதிய பயணச்சீட்டு வழங்கும் கவுண்டர்கள், பயணிகள் தங்கும் ஓய்வறைகளை விரிவாக்கல் மற்றும் நிலையத்திற்கு நுழையும் பாதைகளைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments