Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ராஜித சேனாரத்னவின் முன் பிணை மனு நிராகரிப்பு!

ராஜித சேனாரத்னவின் முன் பிணை மனு நிராகரிப்பு!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.

மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல கடந்த வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை மனு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments