Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க நடவடிக்கை!

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க நடவடிக்கை!

போதைப்பொருள் கடத்தலை முறையாகக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்த தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இலங்கையில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் மிகவும் சுதந்திரமாக இடம்பெற்று வந்ததாகவும், அது சில தரப்பினரின் ஆசீர்வாதம் மற்றும் செல்வாக்கின் கீழேயே செயற்பட்டதாகவும் அவர் இங்கு வலியுறுத்தினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொன்த:

”போதைப்பொருள் கடத்தல் என்பது நீண்டகாலமாக இந்த நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருந்து வந்த ஒன்று. பெருமளவிலானோரின் ஆசீர்வாதம் மற்றும் செல்வாக்கின் கீழேயே அது முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இப்போது அவ்வாறு நடக்காது. அவை முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. போதைப்பொருளை இந்த நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு முப்படையினர், குறிப்பாக இந்த நாட்களில் கடற்படையினர் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதற்குத் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குத் தேவையான அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். இந்தப் போதைப்பொருள் கடத்தல் முறையான வகையில் ஒழிக்கப்படும். இதனுடன் தொடர்புடைய திட்டமிட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் இந்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்” எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments