Sunday, October 4, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பேங்கொக்கில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு ; 40 பேர் பலி

பேங்கொக்கில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு ; 40 பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளநீரில் மூழ்கியும், மின்சாரம் தாக்கியும் சிலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக, பேங்கொக்கின் 50 மாவட்டங்களும் அனர்த்த வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் 230க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் பேங்கொக்கின் சில பகுதிகளில் சுமார் 300 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சில வானூர்தி நிலையங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments