Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி

மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

நாவலப்பிட்டி -மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இன்று (04) காலை 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பத்தில் ஒரு பாடசாலை மாணவனும், இரண்டு பெண்களும் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments