நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை தற்போதைய அட்டமஸ்தானாதிபதியான பல்லேகம ஹேமரதன தேரரின் பதவி தற்காலிக இடைநிறுத்தப்படுவதாக கண்டி மல்வத்து மகா விகாரை இன்று அறிவித்துள்ளது.
அத்துடன், அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கர் ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கண்டி மல்வத்து மகா விகாரை இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மகா சங்க சபை மற்றும் அட்டமஸ்தானக் குழுவின் தீர்மானத்திற்கமைய இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பல்லேகம ஹேமரதன தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.



