Sunday, August 2, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீர்கொழும்பு கடலில் மாயமான இரு மீனவர்களில் ஒருவர் பலி!

நீர்கொழும்பு கடலில் மாயமான இரு மீனவர்களில் ஒருவர் பலி!

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்ததாகக் கூறப்படும் இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

அனர்த்தத்திற்குள்ளான மற்றைய மீனவர் பாதுகாப்பாகக் கரை சேர்ந்ததையடுத்து மீட்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (01) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற டிங்கி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளமை முதன்முதலில் வேறொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தெரியவந்தது.

எவ்வாறாயினும், இச்சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல்போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, விபத்துக்குள்ளான மீனவர்களையும் காணாமல்போன படகுகளையும் மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு விசேட நடவடிக்கையொன்றையும் ஆரம்பித்திருந்தன.

அத்தேடுதல் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 412’ ரக ஹெலிகொப்டர் ஒன்றும், கடற்படைக்குச் சொந்தமான ‘டோரா’ படகொன்றும் விசேட மூழ்கிப்படை (Diving) வீரர்களின் குழுவொன்றும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments