Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீராடச் சென்ற 16 வயது சிறுவன் மாயம்!

நீராடச் சென்ற 16 வயது சிறுவன் மாயம்!

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வுட், கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (04) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஐந்து நண்பர்களுடன் குறித்த ஓயாவிற்குச் சென்று நீராடிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராத விதமாக அச்சிறுவன் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளான்.

இவ்வாறு காணாமல் போனவர் நோர்வுட், அயரபி தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ‘வாசிகன்’ என நோர்வுட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுவனைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் நோர்வுட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments