Monday, September 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாட்டில் இன்றும் 100 மி.மீ மழை

நாட்டில் இன்றும் 100 மி.மீ மழை

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேநேரம் ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் .

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments